search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைக்கிள் போட்டி"

    • அரசு பள்ளியில் சைக்கிள் போட்டி நடைபெற்றது.
    • சப்-இன்ஸ்பெக்டர்கள் தொடங்கி வைத்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருவாய் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டி 14, 17, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு தனித்தனியாக நடைபெற்றது. இதனை விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், அன்பழகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த போட்டி வி.கைகாட்டி-முனியங்குறிச்சி பாதையில் ஆரம்பிக்கப்பட்டு விக்கிரமங்கலம் பஸ் நிலையம் அருகே நிறைவடைந்தது. இந்த போட்டியில் கலந்து கொண்டவர்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி சென்றனர். இதில் வெற்றி பெற்ற 12 மாணவ-மாணவிகளுக்கு விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அறிவழகன் பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது."

    • சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ராமநாதபுரம் கலெக்டர் வழங்கினார்.
    • ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு துறை சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு துறை சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்ளுக்கு சைக்கிள் போட்டி நடந்தது. போட்டியில் முதல் 3 இடம் பெற்ற மாணவ-மாணவிகள் பெயர்கள் வருமாறு:-

    13 வயது பிரிவில் முதல் 3 இடங்களில் ராமநாதபுரம் வேலுமாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தருண் வலம்புரிவேல், ஸ்ரீகுமரன் நடுநிலைப்பள்ளி பிரதீப் ராஜ், அமிர்த வித்யாலயா மேல்நிலைப்பள்ளி ஷனேல் ஆண்டர்சன், மகளிர் பிரிவில் ஸ்ரீகுமரன் நடுநிலைப்பள்ளி சந்தியா, தேன்மொழி, ஆல்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிரதிக்ஷாஸ்ரீ வெற்றி பெற்றனர்.

    15 வயது பிரிவில் ராமநாதபுரம் சதக் கபீர் பப்ளிக் பள்ளி சீனிபர்ஹான் முகமது, டி.டி. விநாயகர் மேல்நிலைப்பள்ளி சச்சின், தர்வின் லியா. மகளிர் பிரிவில் ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி அசனத்துல் பேகம், நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஹர்னிஸ்ரீ, ஜெய்ஸ்ரீ.

    17 வயது பிரிவில் உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைபள்ளி தன சேகரன், டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி அபி ேஷக், உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப்பள்ளி அசோக் பிரபு. மகளிரில் ராஜா மேல்நிலைப்பள்ளி சர்மிளா, ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஹார்மி, மண்டபம்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி காருண்யா வென்றனர்.

    முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, 2-வது பரிசு ரூ.3000, 3-வது பரிசு ரூ.2000 வழங்கப்பட்டது. 4 முதல் 10-வது இடம் வந்தவர்களுக்கு தலா ரூ.250 பரிசு தொகை, சான்றிதழ்களை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

    • ராமநாதபுரத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடந்தது.
    • இந்த போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை நடைபெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டியை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

    சைக்கிள் போட்டியில் 13 வயது பிரிவில் மாணவர்கள்-15 கி.மீ., மாணவிகள்-10 கி.மீ., சைக்கிள் ஓட்ட வேண்டும். 15- 17 வயதிற்குட்பட்ட பிரிவில் மாணவர்கள்- 20 கி.மீ., மாணவிகள்- 15 கி.மீ., கடக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது.

    ராமநாதபுரம் பட்டணம்காத்தான் இ.சி.ஆர். 4 வழிச்சாலை பிரிவில் தொடங்கி, மதுரை ரோடு, பாப்பாக்குடி பஸ் ஸ்டாப், நயினார்கோவில் வளைவிற்கு சென்று, மீண்டும் இ.சி.ஆர்., சாலைக்கு திரும்பி வந்தனர். போட்டியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

    இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, 2வது பரிசு ரூ.3000, 3வது பரிசு ரூ.2000, 4 முதல் 10 வது இடம் வருபவர்களுக்கு தலா ரூ.250 பரிசு வழங்கினர். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட விளையாட்டு, இளைஞர் நல அலுவலர் செந்தில்குமார் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

    • தாழக்குடி நீலகண்டன் உணவகம் முன்பிருந்து தொடங்கிய சைக்கிள் போட்டியை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • 13, 15, 17 வயதுக்குட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு என 3 பிரிவுகளில் நடந்த சைக்கிள் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி சைக்கிள் போட்டி இன்று நடந்தது.

    நாகர்கோவில் புற வழிச்சாலையில் உள்ள தாழக்குடி நீலகண்டன் உணவகம் முன்பிருந்து தொடங்கிய சைக்கிள் போட்டியை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், தேரேக்கால் புதூர் ஊராட்சி தலைவர் சோமு நாகர்கோவில் மாநகரச் செயலாளர் ஆனந்த் ஒன்றிய செயலாளர் மதியழ கன் நாகர்கோவில் மாநகர துணை செயலாளர் வேல் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சைக்கிள் போட்டி 3 பிரிவுகளில் ஆண் பெண்க ளுக்கு என தனித்தனியாக நடத்தப்பட்டது. 13, 15, 17 வயதுக்குட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு என 3 பிரிவுகளில் நடந்த சைக்கிள் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    17 வயதுக்குட்பட்ட மாண வர்களுக்கான போட்டியில் அனந்த நாடார்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆதித்யா முதல் பரிசும், கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் விஸ்வா 2-வது பரிசும், நாகர்கோவில் எஸ் எல்.பி. பள்ளி மாணவன் நந்தகுமார் 3-வது பரிசும் பெற்றனர்.

    15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் எஸ்.எல்.பி. பள்ளி மாணவன் மஞ்சுநாதன் முதல் பரிசும், மஞ்சு தேவன் 2-வது பரிசும் வென்றனர். இவர்கள் இருவரும் சகோதரர் ஆவார்கள். 3-வது பரிசை ராமபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் மதன் பெற்றார்.

    • மதுரையில் அண்ணா பிறந்த நாளையொட்டி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • சைக்கிள் போட்டிக்கு மானியமாக அரசு ரூ.3 ஆயிரம் ஒதுக்கீடு செய்ததை உயர்த்தி தற்போது இந்த சைக்கிள் போட்டிக்கு ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளனர்.

    மதுரை

    தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு ஆண்டுதோறும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.

    அதன்படி இந்த ஆண்டு முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு கடந்த ஆண்டுகளில் சைக்கிள் போட்டிக்கு மானியமாக அரசு ரூ.3 ஆயிரம் ஒதுக்கீடு செய்ததை உயர்த்தி தற்போது இந்த சைக்கிள் போட்டிக்கு ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளனர்.

    இன்று காலை அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மதுரை பிரிவு சார்பில் நடந்த சைக்கிள் போட்டிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்தப் போட்டி 6 பிரிவுகளாக நடந்தது. 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 20 கிலோ மீட்டர் தூரமும், 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், 13 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் 10 கிலோ மீட்டர் தூரமும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் 15 கிலோமீட்டர் தூரமும், 15 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் 15 கிலோமீட்டர் தூரமும், 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோமீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடந்தது. மதுரை ரேஸ்கோர்ஸ் எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்தில் இருந்து புதூர்,மூன்று மாவடி, கடச்சனேந்தல், கள்ளந்திரி வரை என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ. 2 ஆயிரம், 4 முதல் 10 வரையிலான இடத்திற்கு வருபவர்களுக்கு தலா ரூ.250-த்திற்கான காசோலைகள் வழங்கப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் காலோன், மேயர் இந்திராணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடந்தது
    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்

    ராணிப்பேட்டை:

    15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை சிறப்பாக கொண்டாடும் வகையில் 2022-2023 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் பிரிவின் சார்பாக இன்று காலை 7 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து சைக்கிள் போட்டி தொடங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சைக்கிள் போட்டியினை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

    இப்போட்டியில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை மேல்நிலை பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் சைக்கிள் போட்டியில் ஆர்வமாக கலந்து கொண்டனர்.

    இப்போட்டியில் மாணவ- மாணவிகள் 13 வயது, 15 வயது, 17 வயது கொண்ட மாணவர்கள் 5கி.மீ தூரம் கலந்து கொண்டனர்.

    வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு காசோலை மூலம் முதல் பரிசாக ரூ.5000 இரண்டாம் பரிசாக ரூ.3000 மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். 4 முதல் 10 இடங்களில் பிடிப்பவர்களுக்கு ரூ.250 வீதம் பரிசு தொகையும் தகுதி சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

    போட்டிகள் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி சிப்காட் பெல் ரூட் அக்ராவரம் வழியாக சென்று மீண்டும் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பி.பிரபு மற்றும் மாவட்ட உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்கள், ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து வகை பள்ளிகளின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 15ம் தேதி பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    • அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் நடைபெருகிறது.
    • கியர் இல்லாத சைக்கிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    கோவை,

    அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற உள்ள மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் மாணவர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெருகிறது.

    போட்டி கோவைப்புதூரில் உள்ள தனியார் கல்லூரி ரோட்டில் வரும் 15-ந் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு கி.மீ. 15 கி.மீ. தூரமும், 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் போட்டி நடத்தப்பட உள்ளது.

    இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் இந்தியாவில் தயாரான கியர் இல்லாத சைக்கிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து வயது சான்றிதழ் பெற்று, மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் வரும் 13-ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இப்போட்டியில், முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.5000, ரூ.3000, ரூ.2000 வீதமும், 4 முதல் 10-ம் இடம் வரை வருபவர்களுக்கு தலா ரூ.250 வீதம் பரிசுத் தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி ஈரோ ட்டில் நடத்தப்பட உள்ளது.
    • இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

    ஈரோடு, செப். 11-

    மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி ஈரோ ட்டில் நடத்தப்பட உள்ளது.

    இதில் 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டரும், 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டரும் போட்டி நடத்தப்படுகிறது.

    இதில் பங்கேற்க விரும்பும் மாணவ-மாணவிகள் இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த போட்டி வருகிற 15-ந் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது.

    ஈரோடு பெருந்துறை ரோடு வீரப்பம்பாளையம் பிரிவில் இருந்து தொடங்கி நந்தா கலை அறிவியல் கல்லூரி வரை சென்று விட்டு மீண்டும் வீரப்பம் பாளையம் பிரிவுக்கு வரவேண்டும்.

    இந்த போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் மாணவ-மாணவி களுக்கு தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வீதமும், 4-வது முதல் 10-வது இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.250 பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ -மாணவிகள் தங்களது பள்ளியில் இருந்து வயது சான்றிதழ் பெற்று வரவேண்டும்.

    இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

    • போட்டியை கலெக்டர் வினீத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் விளையாட்டு பிரிவின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், 15 வயது,17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தலா 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு தலா 15 கிலோ மீட்டர் தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.

    போட்டியை கலெக்டர் வினீத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி, திருப்பூர் மாவட்ட கபடி கழக இணை செயலாளர் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்ட உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜகோபால் வரவேற்றார்.

    13 வயதுக்கு உட்பட்டோர் மாணவர்கள் பிரிவில் பிளாட்டோஸ் அகாடமி மாணவர் சபரீஸ்வர் முதலிடத்தையும், காங்கயம் எஸ்.ஆர்.ஆர். பள்ளி மாணவர் உதயகிரி 2-வது இடத்தையும், ஹரிஸ்ராம் 3-வது இடத்தையும் பிடித்தனர். மாணவிகள் பிரிவில் செயின்ட் ஜோசப் பள்ளி மாணவி சர்நிதா முதலிடத்தையும், விகாஸ் வித்யாலயா பள்ளி மாணவிகள் தீக்ஷனா 2-வது இடத்தையும், சஞ்சனா 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    15 வயதுக்கு உட்பட்டோர் மாணவிகள் பிரிவில் பிளாட்டோஸ் அகாடமி மாணவி அனுஸ்ரீ முதலிடத்தையும், ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி மாணவி வர்ஷிதா 2-வது இடத்தையும், பொம்மநாயக்கன்பாளையம் அரசு பள்ளி மாணவி அபிநயா 3-வது இடத்தையும் வென்றனர். மாணவர்கள் பிரிவில் காங்கயம் எஸ்.ஆர்.ஆர். பள்ளி மாணவர்கள் சஞ்சீவ் ராகவேந்திரா முதலிடத்தையும், அஸ்வின் 2-வது இடத்தையும், கருப்பகவுண்டம்பாளையம் அரசு பள்ளி மாணவர் பரத்ராம் 3-வது இடத்தையும் பெற்றனர்.

    17 வயதுக்கு உட்பட்டோர் மாணவர்கள் பிரிவில் காங்கயம் எஸ்.ஆர்.ஆர்.பள்ளி மாணவர்கள் விஷ்ணு வர்தன், சிவபாலாஜி, அருண்விஷால் ஆகியோர் முறையே 3 இடங்களை பிடித்தனர். மாணவிகள் பிரிவில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளி மாணவிகள் அபிநயாஸ்ரீ, அஞ்சலி சில்வியா, மதுமிதா ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பிடித்தனர். மொத்தம் 87 மாணவிகள், 129 மாணவர்கள் பங்கேற்றார்கள்.

    வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு பிரிவிலும் 4-வது இடம் முதல் 10-வது இடம் வரை பிடித்தவர்களுக்கு தலா ரூ.250 பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

    • வருகிற 11-ந் தேதி நடக்கிறது
    • கலெக்டர் அறிவிப்பு

    ராணிப்பேட்டை:

    பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை சிறப்பாக கொண்டாடும் வகையில் 2022-2023-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் பிரிவின் சார்பாக வருகிற 11-ந் தேதி காலை 7 மணிக்கு நடத்தப்பட உள்ளது.

    இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -

    இதில் இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும், 13 வயது வரை உள்ள மாணவர்களுக்கு 15 கி.மீ.தூரமும், மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15 வயது வரை உள்ள மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ.தூரமும், 17 வயது வரை உள்ள மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும் எ 15 கி.மீ. தூரமும் நிர்ணயிக்க ப்பட்டுள்ளது.

    மேற்கண்ட 3 வயது பிரிவுகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்குகாசோலை மூலம் முதல் பரிசாக ரூ.5000 இரண்டாம் பரிசாக ரூ.3000 மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

    போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு தினப்படி/பயணப்படி ஏதும் வழங்க மாட்டாது. போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் தங்கள் பெயர்களை 11-ந் தேதி காலை 6 மணிக்குள் போட்டி தொடங்கும் இடத்தில் நேரடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டிகள் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி ஆன்சிலரி பெல் ரூட், சீக்கராஜபுரம், முகுந்தராயபுரம், அக்ராவரம், திருமலை கெமிக்கல்ஸ் கம்பெனி வழியாக சென்று தேசிய நெடுஞ்சாலை எண். 40,பெல் நிறுவனம் வரையும் சென்று மீண்டும் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரும்பி வரும் வகையில் நடத்தப்பட உள்ளது.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அலுவலக நேரங்களில் 0416 2221721 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடந்தது.
    • இந்தியாவில் தயாரித்த சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி நடக்கிறது. இதையொட்டி மாவட்டத்திற்கு ரூ.1 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    ராமநாதபுரத்தில் வருகிற 15-ந்தேதி நடக்கும் சைக்கிள் போட்டியில் 13 வயது பிரிவு மாணவர்கள் 15 கி.மீ. தூரம் செல்கின்றனர். மாணவிகள் 10 கி.மீ. தூரம் செல்கின்றனர். 15 வயது முதல் 17 வயதிற்குட்பட்ட வர்களுக்கான பிரிவு மாணவர்கள் 20 கி.மீ. தூரமும், மாணவிகள் 15 கி.மீ. தூரமும் செல்கின்றனர்.

    ராமநாதபுரம் பட்டணம்காத்தான் இ.சி.ஆர். 4 வழிச்சாலை பிரிவில் தொடங்கி, மதுரை ரோடு, பாப்பாக்குடி பஸ் ஸ்டாப், நயினார்கோவில் வளைவிற்கு சென்று, மீண்டும் இ.சி.ஆர்., சாலைக்கு திரும்பி வர உள்ளனர்.

    இந்தியாவில் தயாரித்த சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம், 4 முதல் 10-வது இடம் வரை வருபவர்களுக்கு தலா ரூ.250 பரிசு வழங்கப்படும்.

    இதில் விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளியின் தலைமையாசிரியரிடம் வயது சான்று, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகலுடன் வருகிற 15-ந்தேதி காலை 6 மணிக்கு போட்டி தொடங்கும் இடத்திற்கு வர வேண்டும் என்று மாவட்ட விளையாட்டு, இளைஞர் நல அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    • 13 வயதிற்குள் உள்ள மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 10 கி.மீ தூரமும் போட்டி நடக்கிறது
    • போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் தயாரான மிதிவண்டிகள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : -

    முன்னாள் தமிழ்நாடு முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வண்ணம் ஆண்டு மோறும் செப்டம்பர் மாதம் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டிகள் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் இவ்வாண்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக செப்டம்பர் 15-ந்தேதி அன்று காலை 8 மணிக்கு நாகர்கோவில் - காவல்கிணறு நான்கு வழிப்பாதையில் நடைபெறவுள்ளது.

    13 வயதிற்குள் உள்ள மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 10 கி.மீ தூரமும் போட்டி நடக்கிறது. இதுபோல் 15 வயதிற்குள் மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் 17 வயதிற்குள் மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரம் என்ற அளவில் போட்டிகள் நடக்கிறது.

    பரிசுத் தொகை ஆறு பிரிவுகளுக்கும் முதல் பரிசு ரூ. 5000, இரண்டாம் பரிசு ரூ. 3000, மூன்றாம் பரிசு ரூ. 2000, 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கான பரிசு ரூ. 250 வீதம் 13 பேருக்கு வழங்கப்படுகிறது. மொத்த பரிசு தொகை ரூ. 70 ஆயிரத்து 500 ஆகும். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்வழங்கப்படும். போட்டிகளின் போது தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எதிர்பாராமல் ஏற்படும் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ- மாணவிகள் தங்களது பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து (Bonafide Certificate) வயதுச் சான்றிதழ் கண்டிப்பாக பெற்று வருதல் வேண்டும். சொந்த மிதிவண்டி (சைக்கிள்) கொண்டு வருதல் வேண்டும். இப்போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் தயாரான மிதிவண்டிகள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்.

    போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகையினை காசோலையாகவோ அல்லது வங்கி மாற்று வழி மூலமோ மட்டுமே வழங்கப்படும். எனவே போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் மேற்கண்ட விதிகளை பின்பற்றி செப்டம்பர் 15-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு நாகர்கோவில் - காவல்கிணறு நான்கு வழிப்பாதை தொடக்க இடத்திற்கு வருகை தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×